பாடசாலை வளாகத்துக்குள் யானைகளின் அட்டகாசம்

வவுனியா புதிய வேலன் சின்னக்குளம் ஆனந்தகுமாரசுவாமி வித்தியாலய வளாகத்துக்குள் காட்டுயானைகளின் அட்டகாசம் காரணமாக பயன்தரும் மரங்கள் பல சேதமடைந்துள்ளது.

வவுனியா விளக்குவைத்த குளம் கிராமவேவகர் பிரிவுக்குட்பட்ட புதியவேலன் சின்னக்குளம் கிராமம் காட்டுப்பகுதியை அண்டிய கிராமம்.இக் கிராமத்தில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் மக்கள் குடிமனைப் பகுதிகளுக்குள் புகுந்து விவசாயிகளின் பயிர்களையும் பயன்தரும் மரங்களையும் சேதப்படுத்தி வருகின்றது.

நேற்று இரவு குடிமனை பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் புதியவேலன் சின்னக்குளம் ஆனந்தகுமாரசுவாமி வித்தியாலய வேலியை அறுத்துக்கொண்டு புகுந்து வாழை, மா, பலா உட்பட பல பயன்தரும் மரங்களைப் பிடுங்கி சேதமேற்படுத்தியுள்ளது.

குறித்த பாடசாலை வளாகத்துக்குள் அமைக்கப்பட்டிருக்கும் ஆழ்துளைக் கிணற்றில் மாணவர்கள் கைப்பம்பியால் நீரெடுத்து மிக கஸ்டப்பட்டு பராமரித்து வந்த பயன்தரும் மரங்கள்களை தொடர்ந்தும் யானைகள் சேதப்படுத்தி வருவதால் பாடசாலை சமூகம் விரக்கி நிலையில் இருப்பதாக பாடசாலை ஆசிரியரெருவர் தெரிவித்தார்.

இதேவேளை குடிமனைப்பகுதிகளிளும் விவசாயிகளின் பயிர்களையும் அடிக்கடி காட்டு யயானைகள் சேதப்படுத்தி வருவருகின்றது. இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனவே குறித்த கிராமத்தை சுற்றி யானைவேலி அமைத்தத் தரும்படி புதியவேலன் சின்னக்குளம் கிராமமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here