1990 இலவச அவசர நோயாளர் காவு வண்டி சேவை மட்டக்களப்பிலும் ஆரம்பித்தது!

‘1990 சுகப்படுத்தும் சேவை’ மட்டக்களப்பு மாவட்டத்திலும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

நோய்வாய்ப்படுபவருக்கு முதலுதவி வழங்கி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசென்று சிகிச்சையளிக்கும் வகையில் ‘சுகப்படுத்தும்சேவை’ அவசர நோயாளர் காவு வண்டி சேவை மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவசர நிலையிலுள்ள நோயாளிகளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல 1990 இலக்கத்தை அழைக்கலாம்.

கட்டணமின்றிய இந்த சேவை நேற்று முதல் கிழக்கு மாகணத்தில்- மட்டக்களப்பிலும் செயற்பட ஆரம்பித்தது. இதன்மூலம் வைத்தியசாலைக்கு முன்னரான அவசர சிகிச்சை நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்படுகின்றது.

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையுடன் 2016ம் ஆண்டு ஜுலை 29ம் திகதி மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட 1990 சுவசெரிய சேவை , பின்னர் வடக்கிற்கும் விஸ்தரிக்கப்பட்டது. இப்பொழுது கிழக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது 1990 சுகப்படுத்தும் சேவை தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. கிராம சேவையாளர் ஊடாக மக்களை தெளிவுபடுத்தும் தெளிவூட்டல்கள் நடத்தப்பட்டன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here