
தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு மற்றும் சமுதாய சீர்திருத்தத்தின் ஏற்பாட்டில் ஓட்டமாவடியில் போதைப்பொருள் தடுப்பு சம்பந்தமான துண்டுப்பிரசுரமும், விழிப்புணர்வு கருத்தரங்கும் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.அப்பாஸ் தலைமையில் ஓட்டமாவடி தாருல் குர்ஆன் கலாசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் வளவாளர்களாக சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.ஸப்ரீ, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.சாஜகான் ஆகியோர் கலந்து nhகண்டனர்.
போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமான துண்டுப்பிரசுரங்கள் பொது மக்களுக்கு வினியோகிக்கப்பட்டதுடன், போதைப் பொருள் பாவனையினால் குடும்பத்தில் ஏற்படும் பிணக்குகள், சமுதாய சீர்கேடுகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
