
தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமான துண்டுப் பிரசுரம் இன்று புதன்கிழமை விநியோகிக்கப்பட்டது.
தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமான துண்டுப் பிரசுரம் கொழும்பு திருகோணமலை பிரதான வீதியில் பயணிகளுக்கும் பொது மக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.காலித், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமயாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், சமுர்த்தி வங்கிச் சங்க தலைவர் எம்.தௌபீக், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் எஸ்.அஸீஸ், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், வலய உதவியாளர் பிரிவு உத்தியோகத்தர்கள், சமுதாய அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
