முதன்முறையாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஸஹ்ரானின் மனைவி: பணக்கொடுக்கல் வாங்கல் பற்றி வெளியிட்ட ‘பகீர்’ தகவல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி இன்று கல்முனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை தடுத்து வைத்து தொடர்ந்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், பணக்கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்மாந்துறையில் உள்ள சிலருடன் ஸஹ்ரானிற்கு பணக்கொடுக்கல் வாங்கல் இருந்ததாக அவர் விசாரணையில் தெரிவித்த தகவலின் அடிப்படையில், இன்று கல்முனை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அது தொடர்பில் விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.

அந்த விவகாரத்தில் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தற்போது கல்முனை பொலிஸ் நிலையத்தில் அவரிடம் வாக்குலம் பெறப்பட்டு வருகிறது.

பணக்கொடுக்கல் வாங்கல் செய்ததாக அவரால் குறிப்பிடப்பட்ட சாய்ந்தமருது பகுதி வீடுகளிற்கு சென்றபோது, அந்த வீடுகள் ஆட்களற்று இருந்துள்ளன என்று குறிப்பிடப்படுகிறது. அங்கிருந்தவர்கள் தலைமறைவாகியிருக்கலாமென கருதப்படுகிறது.

ஸஹ்ரானின் மகளும் உடன் வந்தார்.

மேலதிக தகவல்கள் பின்னர் பதிவிடப்படும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here