கியூபாவில் அழிவடைந்த கிராமத்தை புனரமைக்கிறது இலங்கை!

சூறாவளியால் மோசமாக அழிவடைந்த கியூபா நாட்டின் கிராமமொன்றை மீளமைப்பதற்காக, 50,000 அமெரிக்க டொலர் நிதியை நன்கொடையாக வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கியூபாவில் ஏற்பட்ட சூறாவளியால் ஹவநாஹி-ரெக்லாவுக்கு அண்மையிலுள்ள கிராமமொன்று முற்றாக சேதமடைந்துள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையில் காணப்படும், நல்லுறவை மேலும் உறுதிப்படுத்துவதற்காகவும் இந்தாண்டுடன் இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருட நிறைவையொட்டியும் அந்த கிராமத்தை புனரமைக்க தேவையான நிதியை நன்கொடையாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன முன்வைத்த இந்த ​யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here