இன்று தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றனர் மகேஷ் சேனநாயக்க, ரிஷாத்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று மீண்டும் கூட உள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று பகல் 2 மணி அளவில் தெரிவுக்குழு கூடவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் இன்று தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராக உள்ளனர்.

இதற்கான அறிவித்தல் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவுக் குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெறவுள்ள சாட்சி விசாரணையில் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக பிரதி சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here