முகத்தை மூடாமல் மதரீதியான ஆடைகள் அணியலாம்!

முகத்தை மாத்திரம் மூடாமல் மதரீதியான ஆடைகள் அணிந்து செல்லலாம் என அமைச்சரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சு அண்மையில் வெளியிட்ட சுற்றுநிருபத்தில், பெண்கள் சேலையும், ஆண்கள் முழுமையான உடையும் அணிந்து செல்ல வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு முஸ்லிம் தரப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. தமது மதரீதியான ஆடைகள் அணிய அனுமதிக்க வேண்டுமென முஸ்லிம் எம்.பிக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டது. உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று ஆடை தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்தார்.

அதில் முகத்தை மாத்திரம் மூடாமல் மதரீதியிலான ஆடைகள் அணிந்து அலுவலகங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here