வீழ்ந்தது இங்கிலாந்து!

லோட்ஸ் மைதானத்தில் நடந்த உலகக்கிண்ண தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது அவுஸ்திரேலியா. 64 ஓட்டங்களால் தோல்வியடைந்த இங்கிலாந்தின் அரையிறுதி கனவிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது இந்த தோல்வி.

அவுஸ்திரேலியா நிர்யணித்த 286 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 44.4 ஓவர்களில் 221 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது. பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 89 ஓட்டங்களை பெற்றார். பேர்ஸ்டோ 27 ஓட்டங்களை பெற்றார். பெஹின்ரோப் 5, ஸ்டார்க் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

முதலில் ஆடிய அவுஸ்திரேலிய 7 விக்கெட் இழப்பிற்கு 285 ஓட்டங்களை பெற்றது. எரோன் பின்ஞ் 100, வோர்னர் 53 ஓட்டங்களை பெற்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here