றெக்சியன் கொலை வழக்கு: கமல், அனிதாவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!

நெடுந்தீவு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் டானியல் ரெக்சியன் (ரஜீவ்) கொலை வழக்கில் வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் க.கமலேந்திரன் மற்றும் ரெக்சியனின் மனைவி அனிதா ஆகிய இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் நிறைவடையாத சந்தர்ப்பத்தில், சட்ட மா அதிபர் தனக்கு இருக்கும் அதிகாரத்தின் கீழ் சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக கொலைக் குற்றச்சாடடை முன்வைத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேரடியாக குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு நவம்பர் நவம்பர் 27 ஆம் திகதிக்கு அண்மித்த காலப்பகுதியில் யாழ்ப்பாணம் புங்குடுதீவு பிரதேசத்தில் டானியல் ரெக்சியன் கமலேந்திரன் என்பவரை கொலை செய்ததன் ஊடாக தண்டனைச் சட்ட நடவடிக்கைக் கோவை 296ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றத்தை புரிந்துள்ளதாக இருவருக்கு எதிராக சட்ட மா அதிபரால் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளரான டானியல் ரெக்சியன் 013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.

இக்கொலை தொடர்பாக ஈ.பி.டி.பி கட்சியின் அப்போதைய யாழ் மாவட்ட அமைப்பாளரும், வடக்கு மாகாணசபையின் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன் (கமல்), ஒரு வாரத்தின் பின் கொழும்பில் வைத்து குற்ற புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டார்.

டானியல் ரெக்சியனுடைய மனைவி அனிதா மற்றும் வேலணையை சேர்ந்த இளைஞர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

கமலேந்திரன் மற்றும் ரெக்சியனுடைய மனைவி ஆகிய இருவரும் கொலையுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் டானியல் ரெக்சியன் கொலை தொடர்பில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக சட்ட மா அதிபர் தனக்குள்ள அதிகாரத்தின் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேரடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

யாழ் மேல் நீதிமன்றத்தில் விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வருமென தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here