SAITM வழக்கில் SLMC உறுப்பினருக்கு பிடியாணை!

சைட்டம் (SAITM) பட்டதாரிகளிற்கு உள்ளக பயிற்சி வழங்க மறுத்த விவகாரத்தில் இன்று (25) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக இலங்கை மருத்துவ சங்கம் (SLMC) உறுப்பினர் வைத்தியர் என்.எஸ்.ஏ. சேனரத்னவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

சைட்டம் பட்டதாரிகளுக்கு மருத்துவ உள்ளக பயிற்சி பெற அனுமதி வழங்காததற்காக இலங்கை மருத்துவ சங்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.

வைத்தியர் சேனரத்ன, மற்றும் மூவரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டிருந்தது. ஏனையவர்கள் முன்னிலையாகியிருந்தபோதும், சேனாரத்ன முன்னிலையாகியிருக்கவில்லை.

SAITM பட்டதாரிகளுக்கு மருத்துவ வேலைவாய்ப்பு வழங்குவதற்கான உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாததன் மூலம் நீதிமன்ற அவமதிப்புடன் செயல்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை SAITM மாணவர் திலம் சூரியராச்சி பதிவு செய்துள்ளார்.

வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அச்சலா வெங்கப்புலி மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணையை ஜூலை 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here