கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யுங்கள்; முஸ்லிம் பெண்களின் முகத்தை மூட அனுமதியுங்கள்: கொழும்பில் முஸ்லிம்கள் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முஸ்லிம் குழுவொன்று இன்று கொழும்பு புதுக்கடையிலுள்ள நீதியமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதன்போது, கல்முனை தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தக் கூடாது என்ற இனவாத கருத்துக்களும் அங்கு பகிரப்பட்டன.

முஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்த போராட்டத்தை நடத்தியது.

ஏப்ரல் 21 தாக்குதல் சூத்திரதாரியை வெளிப்படுத்த வேண்டும், குருநாகல் வைத்தியர் ஷாபியை உடனே விடுதலை செய்ய வேண்டும், முஸ்லிம் பெண்களின் ஆடை கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும், ஞானசார தேரரின் பொதுமன்னிப்பு இரத்து செய்யப்பட வேண்டும், கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here