பொறுப்பற்ற குள முகாமைத்துவத்தால் ஒரு கிராமமே நோய் வாய்ப்படும் அபாயம்!

வவுனியாவில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் சிறுபோகத்திற்கு அதிக நீரை இறைத்து பயன்படுத்தியமை காரணமாக றம்பவெட்டிகுளத்தின் நீர் வற்றியமையால் குளத்தில் உள்ள மீன்கள் இறக்கின்றன. இறந்த மீன்களின் துர்நாற்றத்தால் அவ்வழியினூடாக செல்லும் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா றம்பவெட்டிக்குளத்தின் கீழ் விதைக்கப்பட்டுள்ள 40 ஏக்கர் சிறுபோக விவசாய நிலங்களுக்கு அதிகளவிலான நீரை பயன்படுத்தியமையால் குளத்தது நீர் வற்றியுள்ளது.

இதன் காரணமாக நீர் இன்றி குளத்தில் இருந்த ஏராளமான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுகின்றது.

இதேவேளை, குறித்த குளத்தின் நீர்மட்டத்தை கவனத்தில் கொள்ளாது சிறுபோக நெற்செய்கைக்கு நீர் இறைக்கப்பட்டமையே மீன் இறப்புக்கு காரணம் எனவும், சம்மந்தப்பட்டவர்களின் பொறுப்பற்ற செயற்பாடே இத்தகைய பாதிப்பிற்கு முக்கிய காரணமாகும் என்றும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here