திடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்: காரணம் என்ன தெரியுமா?

பாடசாலையில் கல்வி கற்ற நிலையில் மயங்கி விழுந்து மீட்கப்பட்ட ஆறு மாணவ மாணவிகள் பல்வேறு காரணங்களுக்காக சிகிச்சைக்கென காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று(25) காரைதீவு சண்முகா மகாவித்தியாலய பாடசாலை மற்றும் காரைதீவு ராமகிருஸ்ணா பெண்கள் பாடசாலையை சேர்ந்த குறித்த ஆறு மாணவ மாணவிகளே இவ்வாறு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வருபவர்களில் தரம் 11ஐ சேர்ந்த அ. டனுஸ்காந் (16) யசோதா (16), மலர்விழி(16 அட்டப்பளம்), தரம் 8 மாணவர்களான கே.எஸ் டனுஜா(காரைதீவு 8)ரஞ்சித் யதுசனா (13)உதயகுமார் டிலக்சன்(13) ஆகிய மாணவர்களே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்படி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் கடும் வெயில் காரணமாகவும் காலை ஆகாரம் உண்ணாமை மற்றும் இதர காரணங்களால் திடிரென மயக்கமுற்ற நிலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here