நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு இன்று!

கிரிந்த கடலில் மூழ்கி உயிரிழந்த தந்தை மற்றும் இரண்டு மகள்களின் சடலங்கள் நேற்று இரவு ஹட்டனிலுள்ள அவர்களின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நுவான் இந்திகா ஜெயசூரியா (42), நேசத்மா சஹான்லி விஜேசூரியா (06), நாடின்சா மினோமி விஜேசூரியா (04) ஆகியோரே அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

இறந்த நுவான் இந்திகா விஜேசூரியாவின் மனைவி நுவரெலியாவில் உள்ள ஒரு தனியார் வங்கி கிளையின் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். அவர்கள் சுற்றுலா சென்றபோது, கடந்த 23ம் திகதி கிரிந்த கடற்கரைக்கு சென்றபோது, பிள்ளைகள் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை காப்பாற்ற பெற்றோர் முயன்றபோது, தந்தையும் அலையில் அடித்துச் செல்லப்பட்டார். தாயார் ஆபத்தான நிலையில் அப்பாறை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அட்டன் நேர்சிஹ் ஹோம் வீதியிலுள்ள அவர்களின் இல்லத்திற்கு சடலங்கள் நேற்றிரவு கொண்டு செல்லப்பட்டன. இறுதிச் சடங்குகள் இன்று (25) மாலை 4.00 மணிக்கு ஹட்டன் குடகம பொது மயானத்தில் நடைபெறும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here