அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்காகவே பாலியல் வல்லுறவுக்குள்ளாகும் பெண்கள்!

நவுறு தீவிலுள்ள பெண்கள் பாலியல் வல்லுறவு மற்றும் கருக்கலைப்பு ஆகியவற்றை காரணம் காண்பித்து அவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முயற்சிக்கிறார்கள் என்று உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்துள்ளார்.

மனுஸ் மற்றும் நவுறு தீவிலிலுள்ள அகதிகளை மருத்துவ காரணங்களுக்காக அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவருவதற்கு வகை செய்யும் சட்டத்தை மாற்றுவதற்காக லிபரல் அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக பீற்றர் டட்டன், அந்த நாட்டு ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மருத்துவ காரணங்களுக்காக அவுஸ்திரேலியாவுக்கு வரமுடியும் என்ற சட்டம் நடைமுறையிலிருக்கும் வரையில் அந்த சட்டத்திற்குள்ளேயும் அதைச்சுற்றியும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மனுஸ் – நவுறு அகதிகள் அவுஸ்திரேலியாவுக்குள் வந்துவிடுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.

நவுறுவில் தாங்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அந்தக்கருவை கலைக்க விரும்புவதாகவும் அவுஸ்திரேலியாவுக்கு வருகின்ற பெண்கள், ஆஸ்திரேலியா வந்த உடனேயே இங்கு தஞ்சம் கோரி வழக்குத்தாக்கல் செய்துவிட்டு, தங்களுக்கு கருவை கலைப்பதற்கு விருப்பமில்லை என்று கூறிவிடுகிறார்கள். இதனால், நவுறுக்கு திரும்பிச்செல்லாது அவுஸ்திரேலியாவிலேயே தங்கிவிடுவதற்கான காரியங்களை மேற்கொண்டு விடுகிறார்கள் என்று பீற்றர் டட்டன் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here