புதைக்கப்பட்ட ஒரு மாதத்தின் பின் சடலம் எப்படி வெளியில் வந்தது?

புதைக்கப்பட்ட ஒருவரின் சடலம் 28 நாட்களின் பின் மர்மநபர்களால் தோண்டியெடுக்கப்பட்ட பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கலேவல பொலிஸ் பிரிவிலுள்ள நிக்கவெஹெர, பல்லேவெல பகுதியில் இந்த பரபரப்பு சம்பவம் இடம்பெற்றது.

அங்குள்ள முஸ்லிம் மயானத்தில், 28 நாட்களின் முன் ஒருவரது சடலம் புதைக்கப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த 50 வயதான ஹபிபி லெப்பை மன்சூர் என்பவரது சடலமே புதைக்கப்பட்டது.

உடல் புதைகக்ப்பட்ட 28வது நாளான இன்று, அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக உறவினர்களால் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. பொலிசார் அங்கு சென்றபோது, அருகிலிருந்த மேலும் இரண்டு சவக்குழிகள் தோண்டப்பட்டிருந்தன.

அந்த பகுதியில் பொலிசார் தேடுதல் நடத்தியதில், சுமார் 200 மீற்றர் தொலைவில் கால்வாய் ஒன்றிற்கு அருகில் முருங்கை தோட்டத்தில் மண்ணால் மூடப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டது.

இறந்தவரின் உடல் எதற்காக தோண்டியெடுக்கப்பட்டது என்பதில் குழப்பமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

நீதவான் நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டு அடுத்தக்கட்ட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் மீட்கப்பட்ட இடம் மற்றும் மயானத்திலும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here