
பிக்பாஸ் சீசன் 3 இன்று ஆரம்பித்துள்ளது. பிக்பாஸ் என்றாலே ஓவியா, யஷிகா மாதிரியொருவர் வந்து ஆர்மியை உருவாக்குவார் என்று பார்த்தால், லொஸ்லியா சமூக ஊடகங்களை தெறிக்க விட்டுள்ளார்.
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லொஸ்லியா. இப்படியொருவரை பிடித்தால், இலங்கை மற்றும் ஐரோப்பிய புலம்பெயர் தமிழர்களையும் கட்டிவைக்கலாமென விஜய் டிவி வர்த்தக கணக்கு போட்டிருக்கலாம். அது ஒரு பக்கம் இருக்க, சமூக ஊடகங்களின் எந்த பக்கம் திரும்பினாலும் நம்மவர்கள் லொஸ்லியா புராணமாகத்தான் இருக்கிறது.
லொஸ்லியாவிற்கு வாழ்த்து ஒரு பக்கம் என்றால்… நமது ஊடகங்களில் இந்தியா பாணியில் “கோமாளி“த்தனமாக பேசுவதை போல லொஸ்லியாவும் நமது மானத்தை வாங்குகிறார் என இன்னொரு பக்கம் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
எப்படியோ அடுத்த கொஞ்ச நாளைக்கு சமூக ஊடகங்களில் லொஸ்லியா புராணமாகத்தான் இருக்கும். லொஸ்லியாவிற்கு ஆர்மியை உருவாக்குவார்கள் என பார்த்தால் லொஸ்லியா கவர்மென்டையே பேஸ்புக்கில் உருவாக்கியுள்ளனர் வெறியர்கள்.
லொஸ்லியா பற்றி இன்றிரவு சமூக ஊடகங்களில் என்ன பேசினார்கள்?

கடைசி சண்டைல ஆர்மி மாமா தான் அங்கர் தந்தவர் எண்டும் அடிச்சுவிடும் பாருங்கோவன்…
இவள விட அவள் #திவியாவ கூப்பிடிருக்கலாம் வீடியோவாச்சும் வடிவா செய்திருப்பாள்
நியூமன் பெனடிக்ற்
இத சொல்றத்துக்கு எதுக்கு பாடியும் கையும் அந்த ஆட்டம் ஆடுது….!
ஓ,ஸ்டைலு.


கண்டிப்பா இன்னைக்கு நாமளும் அந்தப்புள்ளைக்கு ஒரு ஆர்மிய உருவாக்கிடனும் கொமாரு.



