இந்தவார ராசிபலன்கள் (23.6.2019- 29.6.2019)

சூரியன், சுக்கிரன், சந்திரனால் அதிக நன்மை உண்டாகும். பேசும் வார்த்தையில் நிதானம் இருக்கும். சூழ்நிலை உணர்ந்து செயல்படுவீர்கள்.

வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு நடைமுறை பின்பற்றவும். புத்திரரின் அறிவுத்திறன் வளர உங்களின் கடந்த கால அனுபவங்களை சொல்வீர்கள். ஆரோக்கியம் பலம் பெறும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் அதிகரிக்கும். சுற்றுலா பயணத்திட்டம் உருவாகும். பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் பணிபுரிவர். பெண்கள் கணவரின் அன்பால் சந்தோஷவாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பரிசு, பாராட்டு பெறுவர்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

குரு, சுக்கிரன்,செவ்வாய், சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். முன்னேற்றம் பெற உதவிய நண்பர்களுக்கு நன்றி சொல்வீர்கள்.

வாகனப்பயணம் நன்மை தரும். புத்திரர் பிடிவாத குணத்துடன் செயல்படுவர். பூர்வ சொத்தில் ஆதாயம் கிடைக்கும். பணம் கடன் வாங்குவதில் நிதானம் பின்பற்றவும். மனைவி குடும்பநலனுக்கான பணிகளை மேற்கொள்வார். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்கவும். பணியாளர் பணியிடத்தில் விவாதம் பேச வேண்டாம். பெண்கள் உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர்.
பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

சுக்கிரன், சந்திரன் நற்பலன் வழங்குவர். ஆன்மிக கருத்துக்களை ஆர்வமுடன் சொல்வீர்கள். சமூக நிகழ்வுகளால் புதிய படிப்பினை பெறுவீர்கள்.

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி நிலவும். புத்திரர் உங்களிடம் நண்பர்க்கு இணையாக பழகுவர். முக்கிய பணி நிறைவேற இஷ்டதெய்வஅருள் துணை நிற்கும்.எதிர்ப்பாளரும் மறைமுகமாக உங்களிடம் உதவி பெற விரும்புவர். மனைவியின் நற்செயல் பெருமை சேர்க்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.
பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு சகல ஐஸ்வரியம் தரும்.

பெரும்பான்மை கிரகங்கள் அளப்பரிய நற்பலன் தருவர். பழகுபவர்களின் மனமறிந்து பேசுவீர்கள். செயல்கள் திட்டமிட்டபடி நிறைவேறும்.

புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. புத்திரரின் சொல்லும், செயலும் வளர்ச்சி பெற உதவுவீர்கள் நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் வசூலாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.மனைவி வழி சார்ந்த உறவினர் பாசமுடன் பழகுவர். தொழில், வியாபாரத்தில் அதிக மூலதனத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்றுக் கொள்வர்.பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர்.மாணவர்கள் படிப்பில் தரத்தேர்ச்சி பெறுவர்.
சந்திராஷ்டமம்: 23.6.19 காலை 6:00 மணி – 24.6.19 இரவு 7:29 மணி
பரிகாரம்: சாஸ்தா வழிபாடு சகலநன்மை தரும்.

சூரியன், புதன், ராகு, சந்திரன் ராஜயோகபலன் தருவர். எண்ணங்களில் புதுமை நிறைந்திருக்கும். நண்பர்கள் உங்கள் சொல்லுக்கு வரவேற்பு தருவர்.

உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகள் அறிவாற்றல், செயல்திறனில் முன்னேற்றம் காண்பர். மனைவியின் மனதில் உங்கள் மீதான நம்பிக்கை வளரும். தொழிலில் வளர்ச்சி பெற நவீன மாற்றம் மேற்கொள்வீர்கள். பணியாளர்கள் பணியிடச்சூழல் உணர்ந்து செயல்படுவர். பெண்கள் இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.
சந்திராஷ்டமம்: 24.6.19 இரவு 7:30 மணி – 27.6.19 காலை 6:14 மணி
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சந்திரனால் சுபபலன் கிடைக்கும். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வாகனத்தில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.

பிள்ளைகளின் செயல்களில் குளறுபடி ஏற்படலாம். வழக்கு, விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். மனைவி வழி சார்ந்த உறவினர் அன்பு பாராட்டுவர்.நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை பெருகும்.அரசு வகையில் உதவி கிடைக்கும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். வெளியூர் பயணத்தால் இனிய அனுபவம் கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் வேண்டும்.
சந்திராஷ்டமம்: 27.6.19 காலை 6:15 மணி – 29.6.19 பகல் 2:46 மணி
பரிகாரம்: அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.

குரு, சுக்கிரன், கேது, சனீஸ்வரர் ஆதாயபலன் தருவர். நற்பண்பு உள்ளவர்களின் உதவி கிடைக்கும். உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள்.

வீடு, வாகனத்தில் பயன்பாடு திருப்திகரமாகும். பிள்ளைகளின் செயல்கள் சிறப்பாக அமைந்து பெற்றோர்க்கு பெருமை ஏற்படுத்தும். வழக்கு, விவகாரங்களில் இருந்த கடின போக்கு மாறி அனுகூல மாற்றம் வரும்.மனைவி உங்களின் நல்ல குணங்களை பாராட்டுவார். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் மதித்து நடப்பர். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர்.
சந்திராஷ்டமம்: 29.6.19 பகல் 2:47 மணி – நாள் முழுவதும்
பரிகாரம்: விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

புதன், சந்திரனால் நன்மை உண்டாகும். மனதில் தைரியமும், செயலில் உற்சாகமும் அதிகரிக்கும். பணிகளை திட்டமிட்டபடி செயல்படுத்துவீர்கள்.

தாய்வழி உறவினர்களிடம்; குடும்ப விவகாரம் பேச வேண்டாம். புத்திரரின் எண்ணம் அறிந்து இதமாக நல்வழி நடத்தவும். ஆரோக்கியம் மேம்படும். மனைவியின் நல்ல கருத்து குடும்பத்தில் ஒற்றுமை வளர்க்கும். வெளியூர் பயணம் புதிய அனுபவம் தரும். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பினால் பணவரவு சீராகும். பணியாளர்கள் கூடுதல் தொழில்நுட்பம் அறிந்து கொள்வர். பெண்களுக்கு தாய்வீட்டாரின் உதவி கிடைக்கும். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்ல வேண்டாம்.
பரிகாரம் : பைரவர் வழிபாடு கஷ்டம் போக்கும்.

சந்திரனால் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை கவனமுடன் நிறைவேற்றுவது அவசியம். தாய்வழி உறவினர் சொந்தம் பாராட்டுவர்.
வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு வேண்டும். புத்திரர் நல்ல நண்பர்களின் உதவியால் படிப்பு செயல்திறனில் முன்னேறுவர். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது. கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியிடம் உறவினர் குடும்ப விவகாரம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலங்களை தவறாமல் பாதுகாக்கவும். பணியாளர் நிர்ணயித்த கால அவகாசத்தில் இலக்கை நிறைவேற்றுவர்.பெண்கள் செலவில் சிக்கனம் பின்பற்றுவர்.மாணவர்கள் நண்பர்களின் உதவியால் படிப்பர்.
பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.

பெரும்பான்மை கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். வளர்ச்சிப்பாதைக்கான வழி பிறக்கும். இனிய அணுகுமுறையால் பணி எளிதாக நிறைவேறும்.

வாகனப் பயன்பாடு அளவுடன் இருக்கும். புத்திரர் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வர். மருத்துவ சிகிச்சையால் நோய் தொந்தரவு குறையும். உங்கள் சொல்லும், செயலும் மனைவியின் மனதில் நம்பிக்கையை வளர்க்கும். அரசாங்க உதவி பெற அனுகூலம் உண்டு. புதியவர்களின் ஆதரவில் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.
பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

செவ்வாய், சுக்கிரன், கேது. சனீஸ்வரர் அளப்பரிய நன்மைகளை வழங்குவர். பணிகளை நேர்த்தியாக நிறைவேற்றுவீர்கள்.

உடன்பிறந்தவர்கள் அதிக அன்பை வெளிப்படுத்துவர். தாய்வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குலதெய்வ அருளால் கஷ்டம் அணுகாத சுமுக வாழ்வு பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். மனைவி உங்களிடம் கருத்திணக்கம் கொள்வார். தொழிலில் போட்டி குறைந்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு, சன்மானம் பெறுவர். பெண்கள் தாய் வீட்டாருக்க உதவுவர். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர்.
பரிகாரம்: முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் சுப பலன்களை தருவர். பேச்சில் சுபதன்மை வெளிப்படும். லட்சிய எண்ணத்துடன் பணியில் ஈடுபடுவீர்கள்.

வாழ்வில் முன்னேற்றம் பெற புதிய வாய்ப்பு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. பூர்வ புண்ணிய பலத்தால் நற்செயல்கள் நிறைவேறும். வழக்கு, விவகாரம் அணுகாத சுமுக வாழ்வு உருவாகும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். மனைவியின் கூடுதல் அன்பு பாசம் நெகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் அதிக மூலதனத்துடன் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்களுக்கு தாய்வீட்டாரின் உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
பரிகாரம்: சிவன் வழிபாடு சகல நன்மை தரும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here