லீட்ஸில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றி!


உலகக்கிண்ண போட்டியில் இன்று இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றிபெற்றது இலங்கை.

லீட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் மிரட்டல் பந்துவீச்சு, களத்தடுப்பால் இங்கிலாந்தை 20 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றிபெற்றது. லீட்ஸில் பெறப்பட்ட இந்த வெற்றி அரிதான ஒன்று.

நாயணச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கருணாரத்ன, குசல் பெரேரா களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே 1 ஓட்டத்துடன் கருணாரத்னவை வீழ்த்தினார் ஆர்ச்சர்.மூன்றாவது ஓவரில் 2 ஓட்டங்களுடன் குசல் பெரேரா வீழ்ந்தார்.

3ம் இலக்கத்தில் களமிறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ ஆதிரடியாக ஆடினார். 49 ஓட்டங்கள் (39 பந்து, 6 பௌண்டரி, 2 சிக்சர்) பெற்றார். குஷால் மென்டிஸ் 46 ஓட்டங்கள் பெற்றனர். இறுதிவரை ஆட்டமிழக்காத அஞ்சலோ மத்யூஸ் 85 ஓட்டங்களுடன் (115 பந்து, 5 பௌண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். பின்வரிசையில் தனஞ்ஜெய டி சில்வா 29 ஓட்டங்கள். இதுதான் இலங்கையின் அதிக பட்ச ஓட்டங்கள். 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் வீழ்ந்தர்.

ஆர்ச்சர், வூட் தலா 3 விக்கெட் விழுத்தினர்.

பின்னர் பதிலளித்த இங்கிலாந்து, இலங்கையின் வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

ரூட் 57, ஸ்ரோக்ஸ் ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களை பெற்றனர்.

மலிங்க 43 ஓட்டங்களிற்கு 4 விக்கெட், தனஞஜெய டி சில்வா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

ஆட்டநாயகன் மலிங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here