கதவடைப்பால் முற்றாக முடங்கியது மட்டக்களப்பு!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி இன்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்த கதவடைப்பினால் கிழக்கின் பல பகுதிகள் முற்றாக முடங்கின. குறிப்பாக மட்டக்களப்பு பெருமளவு பகுதிகள் முடங்கின.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தகோரி நடைபெறும் சாகும்வரையிலான உண்ணாவித போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவே இன்று கதவடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது..

கிழக்கு மாணவர் பேரவை என்னும் அமைப்பு துண்டு பிரசுரங்கள் மூலம் விடுத்த அழைப்பினையேற்று இந்த கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டது. பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக இருந்தது.

மட்டக்களப்பு நகரம் முற்றாக முடங்கியதுடன் முஸ்லிம் வர்த்தகர்களும் ஆதரவு தெரிவித்து, வர்த்தக நிலையங்களை மூடியிருந்ததை காணமுடிந்தது.

போக்குவரத்துகள் வழமைபோன்று இயங்கிய அதேவேளையில் மட்டக்களப்பு பொதுச்சந்தையும் இயங்கிய நிலையிலும் மக்கள் தொகை குறைவான நிலையிலேயே காணப்படுகின்றது.

அலுவலகங்கள் இயங்குகின்றபோதிலும் மக்கள் வருகையில்லாத காரணத்தினால் அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்ற நிலையே உள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here