யாழ் பல்கலைகழக வேலைவாய்ப்பு வெற்றிடத்தை நிரப்ப அரசியல் நியமனம்: சுரேஸ் கண்டனம்!

வடக்கில் வேலைவாய்ப்பில்லாமல் ஆயிரக்கணக்கான இளைஞர் யுதவதிகள் இருக்கின்றபோது யாழ்ப்பாண பல்கலைக்கலைகத்திற்கு ஊழியர்கள் நியமனத்தின் போது வடக்கு மாகாணத்தைச் சாரத முஸ்லிம்கள் பலர் நியமிக்கப்படுகின்றதை ஏற்றுக் கொள்ள முடியாது. முஸ்லிம் அமைச்சர் ஒருவர் உயர்கல்வி அமைச்சராக இருந்து தனது இனம் மற்றும் மதம் சார்ந்து இதனைச் செய்கின்றார் என்றால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அவ்வாறு தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவாரா என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்தவிடயங்கள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் வாய் திறக்க முடியாமல் தவிக்கின்றனர். அதேநேரம் இந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவாளர்கள் எனச் சிலரை இதற்குள் நியமித்துள்ளதால் அவர்களும் வாய்திறக்க முடியாத நிலையில் இருக்கின்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். பருத்திதுறை வீதியின் கட்டப்பிராய் சந்தியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கல்விசாரா ஊழியர்களாக 430 பேர் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் 115 பேர் முஸ்லிம் இனத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. முஸ்லிம் இனத்தைச் சார்ந்த ஒருவர் உயர்கல்வி அமைச்சராக இருந்தவர் அல்லது இருக்கின்றார் என்றால் அவர் தனது இனம் மற்றும் மதம் சார்ந்து பல்கலைக்கழகத்திற்கு ஆளணிகளை நியமித்திருக்கின்றார்.

அதுவும் வடக்கு மாகாணத்தைச் சாரதவர்களே பெரும்பாலும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். உண்மையில் வடக்கு மாகாணத்தைச் சார்ந்த பெருமளவிலான இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பில்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு இந்த வேலைவாய்ப்புக்களை வழங்கியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் வெளிமாகாணங்களில் இருந்து கொண்டுவந்த பலரையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்காக நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை. வடக்கிலுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இவ்வாறு வெளியிடங்களில் இருந்த முஸ்லிம்களை கொண்டுவந்து நியமிக்கும்போது, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அந்த மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்களாவது இவ்வாறு நியமிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுகின்றது.

இங்கு ஆயிரக்கணக்காணோர் வேலையில்லாமல் இருக்கின்ற நிலையில் இவர்களை ஒதுக்கிவிட்டு வெளியில் இருந்து கொண்டுவந்து புகுத்துவது எந்தவிதத்தில் சரியானது. ஆனால் இது தொடர்பில் பேசுவதற்கு தொழிற்சங்கங்களும் இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளும் தயங்குகின்றனர். ஏனெனில் இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் சிலரும் தமது ஆட்களை இதில் நியமித்திருக்கின்றனர்.

ஆகையினால் இது தொடர்பில் தாம் ஏதும் கதைத்தால் தாம் நியமித்தவர்களுக்கும் வேலையில்லாமல் போய்விடும் என்று கருதுகின்றனர். ஆகவே இங்குள்ள ஒட்டுமொத்த மக்களின் நன்மைக்காக இது தொடர்பில் அவர்கள் குரல் கொடுக்க வேண்டும். ஆகவே இவ்வாறாக பெருந்தொகையாக முஸ்லிம் இளைஞர்களை கொண்டு வருவது ஏற்புடையதல்ல. மேலும் இப்படி முறைதவறிய வேலைவாய்ப்புகளை வழங்குவது ஏற்றுககொள்ளகூடியதல்ல.

ஒருசிலரது நலன்களுக்காக தமிழ் மக்களை ஒட்டுமொத்தத்தில் பாதிக்கின்ற செயற்பாடுகளை அனைவரும் கைவிட்டு மக்களுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டுமென்றார்.

இதேவேளை இந்தஅரசிற்கு முண்டு கொடுத்ததை தவிர தமிழ் மக்களுக்காக எதனையும் கூட்டமைப்பினர் சாதிக்கவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தாம் அரசிற்கு எதிரான ஆட்கள் என்ற படத்தை காட்ட தற்போது முனைகின்றனர். அதனடிப்படையிலே அவர்களது அண்மைக்கால செயற்பாடுகளும் அமைந்துள்ளன.
அபிவிருத்தி திட்டங்களில் மக்களது எதிர்கால நலன்கள் தொடர்பில் சிந்திக்காமல் அந்தத் திட்டத்திற்குப் பின்னால் ஓடி தமது வாக்குவங்கியை அதிகரிப்பதைதான் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அதாவது அந்த திட்டத்திற்கு பின்னால் ஓடுகின்ற நிலை தான்உள்ளது. இதனைவிட சமுர்த்தி திட்டமும் இது போலவே பயன்படுத்தப்படுகிறது.

ஆக மொத்தத்தில் அரசியல் தீர்வு எதனையும் எட்ட முடியாத நிலையில் மக்களை பணம் கொடுத்து அல்லது ஆசைகாட்டி தமக்கு ஆதரவாக அல்லது தமது பக்கம் மாற்றுகின்ற முயற்சிகள் தான் நடக்கிறது. இதனைவிட அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதுபோல் தற்பொது செயற்படுகின்றர் என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here