‘பற தமழோ’ என திட்டிய சிங்கள உறுப்பினர் மன்னிப்பு கேட்டார்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினரை  என திட்டிய தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்.கொத்மலை பிரதேச சபையில் பரபரப்பு.

கொத்மலை பிரதேச சபை மாதாந்த கூட்டம் இன்று இடம்பெற்றது. கூட்டத்தொடரில் கொத்மலை பிரதேச சபையின் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் வீ.ஏ.சிசிர நாமல் விஜேசூரிய மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தில், பற தமிழோ என சிசிர நாமல் விஜேசூரிய அநாகரிகமாக பேசியதால் கொத்மலை பிரதேசசபையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

தேசிய சுதந்திர முன்னணியின் சிசிர நாமல் விஜேசூரிய, கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டப்படுவது தடைச்செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் நமக்கு புண்ணியம் என பிரேரணை ஒன்றை முன்வைத்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் பாரதிராஜா, அவ்வாறு தடைச்செய்யப்படுவது இனரீதியான பிரச்சனையை கொண்டு வரும், முஸ்லிம்கள் மாட்டிறச்சி சாப்பிடுபவர்கள், அதுமட்டுமல்ல முன்பை விட தற்போது மாடுகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைவு, பால் கொள்வனவு செய்பவர்கள் பணம் முறையாக பணத்தை கொடுக்காததனால் மாட்டை இறைச்சிக்காக கொடுக்கின்றனர். எனவே இவ்வாறானதொரு இப்பிரேரணையை முன்வைப்பது தவறு என கூறினார்.

பாரதிராஜாவிற்கு ஆதரவளிக்கும் வகையில் இ.தொ.காவின் மற்றொரு உறுப்பினரான இளங்கோ, சிசிரநாமல் விஜேசூரியவை பார்த்து ஏற்கனவே வடக்கு பூண்டுலோவில் ஏற்பட்ட விபத்துக்கு உதவி செய்யாத சிசிரநாமல் விஜேசூரிய இதில் புண்ணியம் தேட முற்படுகின்றார் என கூற, பற தமழோ நிப்பாட்டுங்கள் என உறுப்பினர் இளங்கோவை பார்த்து கூற, பெரும் வாய்வாக்குவாதம் ஏற்பட்டது.

உடனே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருக்கைகளைவிட்டு எழுந்து, நிலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் சிசிரநாமல் விஜேசூரிவை மன்னிப்பு கோருமாறு இ.தொ.கா உறுப்பினர்களோடு நிலத்தில் அமர்ந்தனர்.

இதையடுத்து சிசிர நாமல் விஜேசூரிய மன்னிப்பு கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(நீலமேகம் பிரசாந்த்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here