காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளரிடம் பயங்கரவாத தடுப்பு விசாரணைப்பிரிவு விசாரணை

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமாரிடம் இன்று காலை 10.45மணிமுதல் 11.15 வரை வவுனியா பயங்கரவாத தடுப்பு விசாரணைப்பிரிவினர் போராட்டகளத்தில் அரைமணிநேரமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று காலை தொலைபேசி வாயிலாக அழைப்பினை ஏற்படுத்திய வவுனியா பயங்கரவாத தடுப்பு விசாரணைப்பிரிவினர் வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளரிடம் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் எழுத்து மூலமான அறிவிப்பு வழங்கும் பட்சத்தில் உங்களது விசாரணைகளுக்கு முகம் கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் போராட்டம் மேற்கொள்ளும் பகுதிக்கு வருவதாகத் தெரிவித்த வவுனியா பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினர் இருவர் காலை 10.45 மணி முதல் 11.15மணிவரையும் ராஜ்குமாரிடம் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது ஜெனீவா செல்கின்ற விடயங்கள் குறித்தும் கேட்டறிந்ததுடன் நேற்று முந்தினம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்திற்கு உள்வாங்கிய இணைத்தலைமை குழுவிற்கு மூவரை நியமிக்கப்பட்டது தொடர்பாகவும், ஜரோப்பிய அமெரிக்கா கொடிகள் தொடர்பாகவும், ஜனாதிபதியுடன் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் கொழும்பில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டதாகவும் வவுனியாவில் செயற்படும் ஏனைய காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் விபரங்களை கேட்டபோது அது குறித்து எதுவும் தெரியவில்லை என்று பதிலளித்துள்ளதாகவும் இந்நடவடிக்கை ஒரு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கையாகவும் அமைந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இவ்வாறு முதல் ஒரு தடவையும் இரண்டாம் மாடிக்கு அழைக்கப்பட்டு கடந்த வருடம் மாவீரர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது குறித்தும் வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவர் என்ற ரீதியில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here