கல்முனை போராட்டத்திற்கு எதிராக இதுவரை 5 முறைப்பாடுகள்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டுமென்ற தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையை கையிலெடுத்து, கல்முனை விகாராதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு பல தரப்பினரும் ஆதரவளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தின் எதிரில் நடந்து வரும் இந்த போராட்டத்திற்கு எதிராக இதுவரை ஐந்து முறைப்பாடுகளை முஸ்லிம்கள் பதிவுசெய்துள்ளனர்.

கல்முனை பொலிஸ் நிலையத்தில் நான்கு முறைப்பாடுகளும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அமைப்புக்கள், தனிநபர்களால் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இனநல்லுறவிற்கு குந்தகம் விளைப்பது, பொதுப்போக்குவரத்திற்கு இடையூறு என்ற காரணங்களை குறிப்பிட்டு இந்த முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here