நியூசிலாந்து அசத்தல்: இம்முறையும் தென்னாபிரிக்காவிற்கு கனவானது உலகக்கிண்ணம்!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. கேன் வில்லியம்சனின் அசத்தம் சதம் கைகொடுக்க 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்ந்தது. இதன்மூலம், அரையிறுதி வாய்ப்பை இழந்து, உலகக்கிண்ண துரதிஷ்டத்தை தொடர்கிறது தென்னாபிரிக்கா.

பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஆட்டத்தில், ரொஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை பெய்யாத நிலையிலும் மைதானத்தின் வெளிப்பரப்பு ஈரமாக இருந்தால், முதலில் ரொஸ் போடுவது ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் நடுவர்கள் இரண்டு முறை மைதானத்தின் தன்மையை ஆய்வு செய்தனர். இதனால் ஒன்றரை மணி நேரம் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டு, ஓவர்கள் 49 ஆக குறைக்கப்பட்டது.

தென்னாபிரிக்க தரப்பில் குவின்டன் டி கொக்- ஹஷிம் அம்லா களமிறங்கினர். டிகொக் 5 ரன்களுடன் ட்ர்ண்ட் போலல்ட் பந்தில் போல்டாகி வெளியேறினார்.
கப்டன் டூபிளெஸ்ஸிஸ்- அம்லா இணை நிதானமாக ரன்களை சேர்த்தது. 4 பவுண்டரியுடன் 23 ரன்களை எடுத்த டூபிளெஸ்ஸிஸ், லக்கி பெர்குஸன் பந்தில் போல்டானார். 83 பந்துகளில் 55 ரன்களை எடுத்த அம்லாவை போல்டாக்கினார் சான்ட்நர். தடுமாற்றத்துடன் ஆடிய எய்டன் மார்க்ரம் 38 ரன்களுடன் கிராண்ட்ஹோம் பந்தில், பொலின் மன்றோவிடம் கட்ச் தந்தார்.

ரேஸி வேன்டர் டுஸனுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்ட ஓல்ரவுண்டர் டேவிட் மில்லர் ஒருநாள் ஆட்டங்களில் 3000 ரன்களைக் கடந்தார். 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 36 ரன்களை எடுத்த மில்லரை வெளியேற்றினார் பெர்குஸன். அவருக்கு பின் பெலுக்வயோ டக் அவுட்டானார்.

மறுமுனையில் நிதானமாக ஆடிய ரேஸி வேன்டர் தனது 6வது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார். 3 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 64 பந்துகளில் 67 ரன்களுடன் ரேஸி வேன்டரும், 6 ரன்களுடன் கிறிஸ் மோரீஸும் களத்தில் இருந்தனர். 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களையே சேர்த்தது தென்னாபிரிக்கா.

நியூஸிலாந்து தரப்பில் லக்கி பெர்குஸன் 3-59 விக்கெட்டுகளை சாய்த்தார்.

242 ரன்கள் வெற்றி இலக்குடன் நியூஸிலாந்து தரப்பில் மார்டின் கப்டில்- கொலின் மொன்றோ களமிறங்கினர். 9 ரன்கள் எடுத்திருந்த மொன்றோ, ரபாடா பந்துவீச்சில் அவரிடமே கட்ச் தந்து வெளியேறினார்.

5 பவுண்டரியுடன் 35 ரன்களுடன் கப்டிலும், 1 ரன்னுடன் ரோஸ் டெய்லர், ரொம் லத்தமும் அவுட்டாயினர். அப்போது 20வது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்தது நியூஸிலாந்து.

அதன் பின் கப்டன் கேன் வில்லியம்ஸ் உடன் இணைந்து ஓல் ரவுண்டர்கள் ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். நீஷம் 23 ரன்களுக்கு கிறிஸ் மோரிஸ் பந்தில் வெளியேறினார். கிராண்ட்ஹோம் அதிரடியாக ஆடிய நிலையில் அவரது கட்ச் வாய்ப்புக்களை இரண்டுமுறை தென்னாபிரிக்க அணியினர் தவற விட்டனர். இது அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

கிராண்ட்ஹோம் தனது 2வது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார். எனினும் கடைசி கட்ட ஓவர்களில் பந்துகள், ரன்கள் எண்ணிக்கையும் ஒன்றாக இருந்ததால் நெருக்கடியான நிலை ஏற்பட்டது. 2 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 60 ரன்களை சேர்த்த கிராண்ட்ஹோமை அவுட்டாகினார் லுங்கி கிடி.

வெற்றிக்கு 6 பந்துகளில் 8 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், 48.3 வது பந்தில் அதிரடி சிக்ஸர் அடித்து வெற்றி பெறச் செய்தார் வில்லியம்ஸன்.
தனது 12வது சதத்தையும் பதிவு செய்தார். 1 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 138 பந்துகளில் 106 ரன்களுடன் வில்லியம்ஸனும், 2 ரன்னுடன் சான்ட்நரும் களத்தில் இருந்தனர். 48.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்களை எடுத்து வென்றது நியூஸிலாந்து.

தென்னாபிரிக்க தரப்பில் கிறிஸ் மோரீஸ் 3-49 விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்த வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் 9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றது நியூஸி.

தோல்வியடைந்த தென்னாபிரிக்க அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.

8000 ரன்களை துரிதமாக கடந்த 2வது வீரர் அம்லா

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்களுடன் அரைசதம் அடித்த தொடக்க வீரர் ஹஷிம் அம்லா, ஒருநாள் ஆட்டங்களில் 8000 ரன்களை கடந்து புதிய சாதனையையும் படைத்தார். ஏற்கெனவே இந்திய கப்டன் விராட் கோலி தான் 175 ஆட்டங்களில் துரிதமாக 8000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு பின் 176 ஆட்டங்களில் அம்லா இச்சாதனையை படைத்துள்ளார். 2000, 3000, 4000, 5000, 6000 ரன்களை துரிதமாக கடந்த வீரர் என்ற சாதனையும் அம்லா வசம் உள்ளது. 7000 ரன்களை கடந்த சாதனையை ஒரு ஆட்டத்தில் தவற விட்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here