சூடு குறைந்து விட்டது!

பட்ஜெட்டில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளத்தில் அதிகரிக்கப்பட்ட 50 ரூபா சம்பள அதிகரிப்பை கொடுக்க நிதி அமைச்சு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் இரத்தினபுரி மாநில கூட்டத் தொடரின் போதே இவ்வாறு தெரிவித்தார்

இது தொடர்பாக மேலும் உரையாற்றிய வடிவேல் சுரேஸ், ஏப்ரல் மாதம் முதல் இதுவரை காலப்பகுதியில் இந்த கொடுப்பனவு வழங்குவதில் பாரிய பின்னடைவு காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இந்த விடயம் தொடர்பில் பாரிய அழுத்தங்கள் அனைவராலும் கொடுப்பட்டாலும் அதுவும் பின்னடைவை நோக்கியே தற்போது வரை செல்கின்றது என்கின்றார்.அதுமட்டுமல்லாது கடந்த காலங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பல போராட்டங்கள் 27 கட்ட சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இருந்தும் இதற்கு கம்பனிகள் ஒத்துவராததினால் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு தொகையில் தொழிலாளர்களுக்கு நன்மை பகைக்க கூடிய விதத்தில் 700.00 ரூபாய் அடிப்படை சம்பளமும் 50.00 ரூபாய் விலைக் கொடுப்பனவும் மேலதிக இறாத்தலுக்கு தேயிலை 40.00 இறப்பர் 45.00 ரூபாவும்; கட்டாயம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் கைசாத்து இடப்பட்டது. இது போதாது மேலும் சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டும் என்ற மலையக தலைவர்களின் வேண்டுகோலுக்கு அமைய நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் பட்ஜெட் மூலம் நிதி அமைச்சின் ஊடாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கபட்டது.

இருந்தும் இந்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய நிலையில் அவை இன்னும் வழங்கப்படவில்லை. இதனை உடனடியாக வழங்க நிதி அமைச்சு நடிவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வழங்க மலையக ஏனைய தலைமைகளும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்ததில் இன்னும் ஒரு சரியான முடிவு வராமல் இருப்பது வேதனைக்குறியது. இதனை முடித்து கொடுக்க வேண்டிய பொருப்பு நம் அனைவருக்கும் உள்ளது. ஆரம்பத்தில் இருந்த சூடு தற்போது இல்லை. என்று பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here