உலகக்கிண்ணத்திலிருந்து விலகினார் ஷிகார் தவன்!

உலகக்கிண்ண தொடரிலிருந்து இந்தியாவின் ஷிகார் தவன் விலகியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் கையில் ஏற்பட்ட காயம் குணமடையாத நிலையில், அடுத்துவரும் ஆட்டங்களிலும் அவர் பங்கேற்க முடியாதது தெரிய வந்ததையடுத்து அவர் அணியிலிருந்து விலகியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் கம்மின்ஸ் வீசிய பந்தில் இடதுகை பெருவிரலில் காயம் ஏற்பட்டிருந்தது. கடந்த இரண்டு போட்டிகளில் அவர் ஓய்விலிருந்தார். எனினும், உடனடியாக காயம் குணமடைய வாய்ப்பில்லையென மருத்துவர்கள் தெரிவித்துள்ளதையடுத்து, அணியிலிருந்து விலகியுள்ளார்.

இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here