நாளை பிறந்தநாளில் கோத்தபாய விசேட அறிவிப்பு: சிங்கப்பூரில் முகாமிட்ட மஹிந்த!

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு நாளை 70வது பிறந்ததினம். 1949ம் ஆண்மு யூன் 20ம் திகதி பிறந்த கோத்தபாய, சிங்கப்பூரில் மருத்துவ ஓய்வில் இருந்தபடி 70வது பிறந்ததினத்தை நாளை கொண்டாடவுள்ளார்.

டீ.ஏ.ராஜபக்ச நினைவு மண்டபம் அமைத்ததில் இடம்பெற்ற மோசடி தொடர்பான ட்ரயல் அட்பார் வழக்கு இன்று ஆரம்பிக்கிறது. இம்மாத ஆரம்பத்தில் திடீரென பைபாஸ் சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியேற்பட்டது என அசௌகரியமான சூழலில் தனது 70வது பிறந்ததினத்தை கொண்டாடுகிறார்.

மஹிந்த அணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயதான் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையிலேயே அவருக்கு பைபாஸ் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவாரா என்பதில் சந்தேகங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில், கூட்டு எதிரணியின் எம்.பிக்கள் சிலர், சில தினங்களின் முன்னர் மஹிந்தவை சந்தித்து இந்த சந்தேகத்தை எழுப்பினர். பெரும்பாலும் கோத்தபாயவே களமிறங்குவார் என அப்போது அவர் பதிலளித்துள்ளார்.

இதேவேளை, கோத்தபாயவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை சிங்கப்பூருக்கு நேரில் செல்கிறார் மஹிந்த ராஜபக்ச. அவருடன் கூட்டு எதிரணி எம்.பிக்கள் ஒரு பகுதியினரும் செல்கிறார்கள்.

இதேவேளை, கோத்தபாயவின் நெருங்கிய நண்பர்களான சிலோன் ருடே, தெரண ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களும் தற்போது சிங்கப்பூரிலேயே தங்கியுள்ளனர். தனது பிறந்தநாளில், தனது நண்பர்களின் ஊடகங்கள் மூலம், தனது உடல்நிலை குறித்து கோத்தபாய விசேட அறிவிப்பொன்றை விடுவார் என தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here