இங்கிலாந்து வெற்றி!

ஆப்கானிஸ்தான் அணியை அடித்து துவம்சம் செய்து, 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெருவெற்றி பெற்றது இங்கிலாந்து.

உலகக்கிண்ண தொடர் ஆரம்பிக்க முன்னர், பலமான அணிகளிற்கும் தலையிடி கொடுக்கும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது ஆப்கானிஸ்தான். ஆனால் போட்டிகளில் அடிமேல் அடி வாங்கி வருகிறது அந்த இளைய அணி.

நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. ஜோசன் ரோய் காயமடைந்ததால் அணியில் இணைக்கப்பட்ட வின்ஸ் தொடக்க வீரராக களமிறங்கி 26 ஓட்டங்கள் பெற்றார். மற்றொரு தொடக்க வீரர் பரிட்சோ 90 ஓட்டங்கள் (99 பந்துகள், 8 பௌண்டரி, 3 சிக்சர்), ஜோ ரூட் 88 ஓட்டங்கள் (82 பந்துகள், 5 பௌண்டரி, 1 சிக்சர்) விளாசினர்.

ஆனால் இதெல்லாம் ஒரு விசயமேயில்லையென்பதை போல, இன்றைய போட்டியின் ஹைலைட்டான விசயம்- அணித்தலைவர் மோர்கனின் காட்டடி. அதை காட்டடி என சொல்வதா, வேறு ஏதேனும் வார்த்தை இருக்கிறதா என தெரியவில்லை. வெறும் 71 பந்துகளை எதிர்கொண்டவர் 148 ஓட்டங்களை விளாசினார். மொத்தம் 17 சிக்சர்கள். இதன்மூலம் ஒருநாள் போட்டியயொன்றில் அதிக சிக்சர் அடித்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். மோர்கனின் 102 ரன்கள், சிக்கர் மூலமே பெறப்பட்டன. பின்வரிசையில் மொயின் அலி 9 பந்துகளில் 31 ஓட்டங்கள் விளாசினார்.

50 ஓவர் முடிவில்  6 விக்கெட் இழப்பிற்கு 397 ஓட்டங்கள் பெற்றது இங்கிலாந்து.

ஆப்கான் பந்துவீச்சில் முஜிப்உர் ரஹ்மான் 44 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அதுவெ சிக்கனமான வீச்சு.  ரஷீட்கான் 110 ஓட்டங்கள், சட்ரான் 85 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தனர்.

பதிலளித்த ஆப்கான் தொடக்க வீரர சர்தான் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். ஹஸ்மதுல்லா  சஹிடா 76, ரஹ்மத் ஷா 46 ஓட்டங்களை பெற்றனர். 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 247 ஓட்டங்களை, 8 விக்கெட் இழப்பிற்கு பெற்றது. இதன்மூலம் 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கான் வெற்றிபெற்றது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here