கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நாளை காலை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் அலசப்படவுள்ளன. முக்கியமாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் அண்மைய உரை தொடர்பில் இரா.சம்பந்தன் அதிருப்தி தெரிவிப்பார் என தெரிகிறது. இந்தியாவிற்கான பயணத்தை கூட்டமைப்பு மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தியா தொடர்பாக சரவணபவன் பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இது கூட்டமைப்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாளை பேசப்படலாமென தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here