நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார் எகிப்து முன்னாள் ஜனாதிபதி மோர்சி!

எகிப்து முன்னாள் ஜனாதிபதி முகம்மது மோர்சி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பற்றிய வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் முகம் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், நீதிமன்றத்திலேயே அவர் உயிரிழந்தார்.

எகிப்தில் ஜனநாயக முறையில் முதல் முறையாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி (67). இவர் ஜனாதிபதியாக இருந்த போது, பதவி விலக கோரி கடுமையான போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, கடந்த ஜூலை 2013 ல் அந்நாட்டு இராணுவம் இவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது. ஜனாதிபதி மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியவர்களை கொன்ற குற்றத்திற்காக, முகமது மோர்சிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள உளவு பார்த்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையின் போது அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

“அவர் 20 நிமிடங்கள் நீதிபதி முன் பேசிக் கொண்டிருந்தார், பின்னர் மிகவும் களைப்பு மற்றும் மயக்கம் அடைந்தார். அவர் விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அவர் இறந்தார்” என்று ஒரு நீதித்துறை வட்டாரம் தெரிவித்தது.

மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முகம்மது மோர்சி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here