டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!


எஸ்.கோகுல்நாத் (37)
இடம் குறிப்பிடவில்லை

ஐயா எனக்கு 35 வயதாகிறது. நான் தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவன். அண்மைக்காலமாக விறைப்புத்தன்மை எற்படுவதில் பிரச்சினையாயிருக்கிறது. எனது மனைவி எனது உறுப்பைவிடவும் வாழைப்பழம் விறைப்பாயிருக்கிறது என்று அவமானப்படுத்துகிறா.ர் இதற்கொரு தீர்வு உண்டா?

டாக்டர் ஞானப்பழம்: தம்பி உங்களது வாய்துர்நாற்றத்தை உங்களது மனைவியால் சகிக்க முடியாமலிருக்கலாம். புகைப்பதை நிறுத்துங்கள்.துர்நாற்றத்திலிருந்து தப்பிக்க- உங்களை நெருங்க விடாமல் தடுக்க, இப்படி சொல்லியிருக்கலாம்.

அதேநேரம், நிக்கொட்டின் ஆண்களின் விறைப்புத் தன்மையைப் பாதிக்கக் கூடியது. எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிக்கும் ஆள் நீங்கள் என நினைக்கிறேன். தம்பி, மன்மத கலை அப்படியானதல்ல. நீங்களும் உங்களை தயார்படுத்த வேண்டும். கலவிக்கு முன்பான சீண்டல் விளையாட்டுக்களில் அதிகம் அக்கறை காட்டுங்கள். மனைவியும் தயாராவார், நீங்களும் தயாராவீர்கள். வாயில் பற்ற வைப்பதைக் குறைத்தாலே பற்ற வேண்டியதெல்லாம் பற்றும். பிறகு மனைவி வாழைப்பழத்தை பற்றி அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்வார்.

லியோன் பாஸ்கர் (32)
சேமமடு, வவுனியா

எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்களாகிறது. இன்னும் குழந்தைகள் இல்லை. இப்போது எனக்கும் மனைவிக்குமிடையில் கொஞ்சம் மன வேற்றுமை. ஒரே வீட்டில் இருந்தாலும் பேசிக் கொள்வதில்லை. எனக்கு விந்து முந்துதல் பிரச்சனையும் உள்ளது. இந்த குறைபாட்டை எப்படி சரிசெய்யலாம்?

டாக்டர் ஞானப்பழம்: விந்து முந்துதல் உண்மையில் ஒரு குறைபாடில்லை. உதாரணத்திற்கு இப்படி சொல்கிறேன். பூமியில் சில இடங்களை தோண்டினால் சட்டென தண்ணீர் வந்து விடும். சில இடங்களை ஆழமாக தோண்டினால்தான் தண்ணீர் வரும். அது குறைபாடல்ல. நில அமைப்பு. உங்கள் பிரச்சனையும் அப்படித்தான் உடல் அமைப்பு. இதெற்கெல்லாம் தலையை போட்டு உடைக்க வேண்டியதில்லை.

நீங்கள் நல்ல நிர்வாகியாக இருந்தால் இந்த பிரச்சனையை தீர்த்து கொள்ளலாம். நல்ல நிர்வாகி, எதையெதை, எப்போது செய்ய வேண்டுமென அறிந்திருப்பார்.

சிலருக்கு உடலுறவின் போது விந்து முந்தும் பிரச்சனை உண்டு. இவர்களை Minute Man என்பார்கள். பாஸ்கர், இது இயந்திரமல்ல. ஆரம்பத்தால் முடித்த பின்னர்தான் நிறுத்த வேண்டுமென்றல்ல.

விந்து முந்தலிற்கு எளிய தீர்வு உண்டு. தடு – நிறுத்து – இயங்கு (Pause – Stop – Start) என்றொரு தியரி உள்ளது. உதாரணத்திற்கு, சுய இன்பம் செய்து விந்தணுக்கள் வெளியேறும் கட்டத்தில், அவை வெளியேறாமல் நிறுத்திவிட வேண்டும். அப்போது, விந்து வெளியேறாதபடி ஆணுறுப்பின் தலைப்பகுதியைப் பிடித்துக்கொள்ள வேண்டும். 5-10 விநாடிகள்வரை அப்படியே இருந்தால், வெளியேறவேண்டிய விந்தணுக்கள் தடுக்கப்பட்டு, உள்ளே திரும்பிவிடும். இப்படி, குறிப்பிட்ட இடைவெளியில் சில முறை செய்யலாம். இதற்கு மேல் உங்களிற்கு சொல்லித் தர வேண்டுமா பாஸ்கர்?

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here