இந்தவார ராசிபலன்கள் (16.6.2019- 22.6.2019)

பெரும்பான்மை கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். அறிவாற்றல் மேம்படும். செயல்களில் மனிதாபிமானம் நிறைந்திருக்கும்.

உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. குலதெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும். புத்திரர் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் அன்பு பாசம் மனதில் நெகிழ்ச்சியை தரும்.தொழிலில் இடையூறு விலகி உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பரிசு பாராட்டு பெறுவர்.பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள்; படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.
சந்திராஷ்டமம்: 16.6.19 காலை 6:00 மணி – 17.6.19 காலை 11:44 மணி
பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.

சுக்கிரன், குரு, சந்திரன் நற்பலன் தருவர். செயல்களில் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவினர் கருத்து பேதம் கொள்வர். புத்திரர் மனதில் நம்பிக்கை வளர தேவையானதை செய்வீர்கள். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள்.மனைவியின் உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். வெளியூர் பயணத்தில் உரிய பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்வதால் வளர்ச்சி உருவாகும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.

சந்திராஷ்டமம்: 17.6.19 காலை 11:45 மணி – 19.6.19 இரவு 8:47 மணி
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

சந்திரன், சுக்கிரன் நற்பலன் வழங்குவர். நேர்த்தியுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். அக்கம் பக்கத்தினர் அன்பு பாராட்டுவர்.

தாயின் அன்பும் ஆசியும் ஊக்கம் தரும். புத்திரர் பெற்றோரின் வார்த்தையை ஏற்று செயல்படுவர். பூர்வ சொத்தில் ஓரளவு வளர்ச்சி உண்டாகும். எதிர்ப்பாளரிடம் விலகியிருப்பது நல்லது. மனைவி குடும்ப ஒற்றுமை பலம் பெற பணியாற்றுவார்.தொழில் வியாபாரத்தில் மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பு மூலம் வருமானம் காண்பர். பெண்கள் புத்தாடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்கள் கல்வியில் வளர்ச்சியடைவர்.
பரிகாரம்: பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்

குரு, சுக்கிரன், புதன், சனீஸ்வரர் ராஜயோகபலன் தருவர். புதிய உத்தியுடன் திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றுவீர்கள்.

பேச்சில் வசீகரம் இருக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். வாகனத்தின் பயன்பாடு திருப்திகரமாக இருக்கும். புத்திரர் பெற்றோரிடம் நண்பருக்கு இணையாகப் பழகுவர். நோய் தொந்தரவு குறைந்து ஆரோக்கியம் பலம் பெறும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் செயல்கள் சிறப்பாக அமையும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
சந்திராஷ்டமம்: 22.6.19 காலை 7:49 மணி – நாள் முழுவதும்
பரிகாரம்: சிவன் வழிபாடு வெற்றியளிக்கும்.

சூரியன், புதன், செவ்வாய், ராகு அளப்பரிய நற்பலன் தருவர். செயல்களில் சமயோசிதம் நிறைந்திருக்கும்.

தாய்வழி உறவினர் அன்பு பாராட்டுவர். புதிய வீடு, வாகனம் வாங்க அதிர்ஷ்டகரமான சூழல் உருவாகும். புத்திரர் பெற்றோரின் அறிவுரையை தயக்கமுடன் ஏற்றுக்கொள்வர். வழக்கு, விவகாரத்தில் மாற்று உபாயம் தீர்வுக்கு வழிவகுக்கும். மனைவியின் ஆர்வம் மிகுந்த செயல்களை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்ய தாராள பணவசதி கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர்.
பரிகாரம்: மகாலெட்சுமி வழிபாடு சுபவாழ்வு தரும்.

சூரியன், புதன், சுக்கிரனால் நற்பலன் உண்டாகும். மனதில் புத்துணர்வு ஏற்படும். திட்டமிட்ட பணிகள் சிறப்பாக நிறைவேறும்.

கடந்த கால நற்செயலுக்கு பாராட்டு தேடி வரும். தாய்வழி உறவினர் அன்பு பாராட்டுவர். புத்திரர் அறிவாற்றல் சிறந்து படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். பூர்வ புண்ணிய நற்பலன் துணை நின்று உதவும். நோய் தொந்தரவு குறையும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான அரசு உதவியை எளிதில் பெறலாம். பணியாளர்கள் கூடுதல் தொழில்நுட்பம் அறிந்து கொள்வர். பெண்கள் பிள்ளைகளின் நலன் சிறக்க தேவையான பணிகளைச் செய்வர். மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை அமையும்.
பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

குரு, சுக்கிரன், சனீஸ்வரர், கேது சுபபலன் வழங்குவர். இடம், சூழ்நிலை உணர்ந்து செயல்படுவீர்கள். முக்கியமான பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறும்.

உறவினர் கேட்ட உதவியை வழங்குவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வெளியூர் பயணம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். புத்திரரின் எதிர்கால நலனுக்கு தேவையான பணிகளை மேற்கொள்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். பணியாளர்கள் கடமையுணர்வுடன் பணிபுரிவர். பெண்கள் தாய் வீட்டாருக்கு உதவுவர். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.
பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் போக்கும்.

புதன், சந்திரனால் நற்பலன் கிடைக்கும். மனதில் இருந்த தயக்கம் விலகும். உறவினர்கள் மீது பாசம் அதிகரிக்கும்.

வாகனப் பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். புத்திரர் நற்செயல்களால் சிறப்பு பெற உதவுவீர்கள். பூர்வ சொத்தில் அளவான பணவரவு கிடைக்கும். சீரான ஓய்வு உடல்நலனுக்கு அவசியம். மனைவியிடம் உறவினர் குடும்ப விவகாரம் பேச வேண்டாம். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு அவசியம். தொழில், வியாபாரத்தில் குறுக்கிட்ட குறைகளை சரி செய்வதால் வளர்ச்சி கூடும். பணியாளர் பணியிடத்தின் சூழல் உணர்ந்து பணிபுரியவும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் வேண்டும்.
பரிகாரம்: ராமர் வழிபாடு நன்மையளிக்கும்.

சந்திரனால் நன்மை உண்டாகும். அன்புக்குரியவர் உங்களிடம் ஆலோசனை கேட்பர். திட்டமிட்ட பணிகள் குறிப்பிட்ட கால அவகாசத்தில் நிறைவேறும்.

அறிமுகமில்லாதவர்க்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரரின் ஆர்வமிகு செயல் தாமதமாகலாம். நண்பரிடம் கடனாக கொடுத்த பணத்தை கேட்டு பெறுவீர்கள். எதிர்ப்பாளரிடம் விலகியிருப்பது நல்லது. வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும். மனைவி குடும்பநலனில் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். பணியாளர்கள் பணியிடத்தில் விவாதம் செய்ய வேண்டாம். பெண்கள் செலவில் சிக்கனம் பின்பற்றவும். மாணவர்கள் அக்கறையுடன் படிக்கவும்.
பரிகாரம் : பைரவர் வழிபாடு நற்பலன் தரும்.

பெரும்பான்மை கிரகங்களால் அளப்பரிய நற்பலன் கிடைக்கும். மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும்.

குடும்பத்தில் சுபவிஷய பேச்சு நடக்கும். நீண்டதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. புத்திரர் அறிவாற்றல் மேம்பட்டு செயல்களை ஆர்வமுடன் நிறைவேற்றுவர். எதிரி செய்த கெடுதல் முயற்சி பலம் இழக்கும். உடல் ஆரோக்கியம் பலம்பெறும்;.மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மனம் மகிழ்வீர்கள். தொழிலில் போட்டி குறைந்து உற்பத்தி விற்பனை பெருகும். பணியாளர் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்று வருமானம் காண்பர்.பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் நன்கு படித்து பரிசு பாராட்டு பெறுவர்.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.

கேது, சுக்கிரன், சனீஸ்வரரால் ஆதாய பலன் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்கள் வெற்றிப் பாதையில் செல்லும்.

நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். வாகனத்தின் பயன்பாடு திருப்திகரமாக இருக்கும். அரசு வகையில் உதவி கிடைக்கும். புத்திரரின் எண்ணம், செயலில் குளறுபடி ஏற்படலாம். ஆரோக்கியம் பலம் பெறும். மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அளவுடன் இருக்கும். லாபம் சீராக வரும். பணியாளர்கள் சலுகை பெறுவர்.பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையை பாதுகாத்திடுவர்.மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பர்க்கும் உதவுவர்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

புதன், குரு, சுக்கிரனால் அளப்பரிய நற்பலன் கிடைக்கும். மனதில் நல்ல சிந்தனை உருவாகும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

வாகனத்தின் பயன்பாடு திருப்திகரமாக இருக்கும்.புத்திரர் பெற்றோர் சொல்லை ஏற்று செயல்படுவர்.அதிக நிபந்தனையுடன் சொத்தின் பேரில் கடன் பெறக் கூடாது. பகைமை குணம் உள்ளவரிடம் விலகவும். மனைவி அன்பு பாசத்துடன் ஆலோசனை வழங்குவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் அதிகரிக்கும். பணியாளர்கள் பணியிடச்சூழல் உணர்ந்து செயல்படுவர். பெண்கள் பணம் சேமிப்பதில் கவனம் செலுத்துவர். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர்.
பரிகாரம்: அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here