கிளிநொச்சி சிறுவனை பிடித்தது பேயா? : மந்திரவாதியின் பேச்சை நம்பியதால் விபரீதம்!

கிளிநொச்சியில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சிறுவனை வைத்தியசாலையில் சேர்க்காமல், வீட்டில் வைத்து மந்திரவாதிகள் மூலம் பேய் விரட்டும் முயற்சியில்  பெற்றோர் ஈடுபட்ட நிலையிலேயே, சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

கிளிநொச்சி செல்வா நகரை சேர்ந்த பரமேஸ்வரன் அபினேசன் (15) என்ற சிறுவனே பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இந்த மாணவன் கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் கல்வி பயின்று வந்தான். கடந்த சில தினங்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தான். அதை பெற்றோர் கவனிக்கவில்லை. இதையடுத்து மாணவனின் நடத்தையில் சிறிய மாறுதல் ஏற்பட்டுள்ளது. மகனிற்கு பேய் பிடித்து விட்டதாக கருதிய பெற்றோர், அவனை மந்திரவாதியொருவரிடம் காண்பித்துள்ளனர்.

சிறுவனிற்கு பேய் பிடித்துள்ளதாக கூறிய மந்திரவாதி, 3000 ரூபா செலவிட்டால் பேயை தலைதெறிக்க ஓட வைப்பேன் என கூறியுள்ளார். இதை நம்பிய பெற்றோரும், வீட்டில் வைத்தே போயோட்டும் சிகிச்சையை ஆரம்பித்தனர்.

இதையடுத்து கடந்த சில தினங்களாக அந்த வீட்டில் பேயோட்டுவதற்கான முயற்சிகள் நடந்தன. மந்திரவாதி சொன்னதை போலவே பெற்றோரும் நடந்து கொண்டனர். எனினும், பேய் சிறுவனை விட்டு போகாமல், அவனது காய்ச்சல் அதிகரித்துள்ளது.

நேற்றுமுன்தினம் (23) காலையில் காய்ச்சல் முற்றி, சிறுவன் நினைவிழக்கும் தறுவாயில்தான் புத்தி தெளிந்த பெற்றோர், மந்திரவாதியை நம்பி பலனில்லையென, சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், வைத்தியசாலையில் சேர்க்கும்போது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

காய்ச்சல் காரணமாக இதய பகுதியில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது, இதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படாததல் உயிரிழப்பு நடந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here