வடக்கில் கணவனை இழந்த பெண்களை முஸ்லிம்கள் ஏமாற்றி குழந்தை பெற வைக்கிறார்கள்: ஞானசார தேரர் அதிரடி!

வடக்கில் யுத்தத்ததில் கணவன்மாரை இழந்து விதவைகளாக உள்ள தமிழ் பெண்களை இஸ்லாமிய ஆண்கள் வன்கொடுமை செய்து பிள்ளைகள் பிறக்க வைக்கிறார்கள். இது தொடர்பான ஆவணங்கள் என்னிடமுள்ளது. எனினும், எந்த தமிழ் தலைவரும் இது தொடர்பாக வாய் திறக்கவில்லையென புதிய குண்டை போட்டுள்ளார் பொதுபலசேனவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நீர்கொழும்பைச் சேர்ந்த குழுவொன்று வடக்குக்குச் சென்று, அங்கு அப்பாவிகளாகியுள்ள அந்தப் பெண்களை ஏமாற்றி, இந்த வேலையைச் செய்கின்றனர். அதேபோன்று, இலங்கை முழுவதிலும் செயற்பட்டு வரும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள், சிங்களப் பெண்களைப் போன்று தமிழ்ப் பெண்களையும் இஸ்லாமிய மதத்துக்கு மதமாற்றம் செய்கின்றனர். மருத்துவக் கல்வியைக் கற்ற சாரா என்ற பெண்ணும், தமிழப் பெண்​ என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறாக, தமிழ், சிங்களப் பெண்கள் இஸ்லாமியர்களாக மாறியதற்கான சத்தியக் கடதாசிகளும், சாட்சிக்காக என்னிடம் இருக்கின்றன.

இவர்கள், ஷரிஆ சட்டத்தின் பிரகாரம் இனி நடந்துகொள்வதாகக் கூறியே சத்தியக்கடதாசியில் கையொப்பம் இடுகின்றனர். அப்படிப்பார்த்தால், எங்களுக்கு அருகில் வந்து குண்டுத் தாக்குதல் நடத்துபவர் முஸ்லிமாக இருக்கத் தேவையில்லை. இந்த நிலைமை மிகப் பயங்கரமானது“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here