கப் எங்களுக்குத்தான்; அபிநந்தன் சம்பவத்தை தொடர்புபடுத்தி பாக். விளம்பரம் வைரலாகிறது!

உலகக்கிண்ண போட்டிகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் ஊடகங்கள் மாறி மாறி விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர். இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாஸ் டிவி, அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டபோது சமூக வலைதளங்களில் வைரலான உரையாடலை நகைச்சுவையான முறையில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்துடன் தொடர்புபடுத்தி வெளியிட்டுள்ளது.

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

அந்த வீடியோவில், அபிநந்தனைப் போல் வேடமிட்ட ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் ரிசேர்ட்டை அணிந்துள்ளார். அதில் உங்கள் அணியின் ப்ளேயிங் லெவனில் யாரெல்லாம் விளையாட இருக்கிறார்கள் என்று கேட்க, அதற்கு அவர் நான் உங்களிடம் இதனைக் கூறக்கூடாது என்கிறார்.

“சரி நாங்கள் அளித்த டீ எப்படி இருக்கிறது“ என்று கேட்க, “டீ அற்புதமாக இருக்கிறது“ என்பார். இதனைத் தொடர்ந்து அவரை அங்கிருந்து செல்லச் சொல்வார்கள். அவரும் கையில் வைத்திருக்கும் கப்புடன் அங்கிருந்து செல்வார். உடனே கப் எங்களுக்கு என்று கப்பை அவரிடமிருந்து வாங்குவார்கள்.

இதன் மூலம் இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் உலகக்கோப்பையை வெல்வார்கள் என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here