என் காதல் ஏன் தோற்றது?: காரணம் சொல்கிறார் காஜல்!

சீதா என்னும் தெலுங்கு படத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக நடித்த பின்னர் நடிகை காஜல் அகர்வால், ஜெயம் ரவியின் கோமாளி பட ரிலீஸுக்காக காத்திருக்கிறார். ஜெயம் ரவி ஒன்பது வேடங்களில் நடிக்கும் அவரின் 24வது படத்தில் காஜல்தான் ஹீரோயின். தெலுங்கு தமிழ் சினிமாத்துறையில் தற்போது உட்ச நட்சத்திரம் என்கிற அந்தஸ்துடன் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

சமீபத்தில் காஜல் அகர்வால் துளி மேக்கப் கூட போடாமல் போட்டோஷூட் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் பலரின் பாராட்டுக்களை பெற்றார் காஜல்.

33 வயதாகும் காஜல் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இந்நிலையில் தன் வாழ்க்கையில் சந்தித்த காதல் தோல்வி பற்றி மனம் திறந்துள்ளார்.

சினிமாவிற்கு வரும் முன்பே இவருக்கு ஒரு காதல் தோல்வி இருந்ததாம். அக்காதல் தோல்வி அடைய, அதன்பிறகு சினிமாவில் முன்னணிக்கு வந்த பிறகு காஜல் ஒருவரை காதலித்தாராம்.

“அவர் சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை. அந்த காதலும் தோல்வியில் முடிய, நான் அதிக நேரம் ஒதுக்க முடியாமல் போனது தான் காரணம். ஒரு உறவிற்கு முக்கியம் நேரில் சந்தித்து, நேரம் செலவிடுவது தான். ஆனால் என்னால் அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால் காதல் தோல்வியின் முடிந்தது” என காஜல் தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here