பா.ரஞ்சித் கைதாகலாம்?

ராஜராஜ சோழனை அவதூறாக பேசியாக பதிவு செய்யப்பட்ட புகார் மீது காவல்துறை செவ்வாய்க்கிழமை பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் ஜூன் 5 ஆம் தேதி உமர்பாரூக் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழனைப் பற்றிப் பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிரானது மேலும் சாதிகளுக்கு இடையே பிரிவினை மற்றும் பிளவை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது எனவே ரஞ்சித்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் இந்து மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலர் ஒருவர் திங்கள் கிழமை புகார் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து ரஞ்சித் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153ன்படி கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியது, பல்வேறு பிரிவினரிடையே விரோதத்தை உருவாக்கி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பா.ரஞ்சித் இந்த வழக்கு குறித்து பேசி வருவதாகவும், முன் ஜாமீன் கோரலாம் என்றும் கூறி வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here