அதிமுகவில் இணைந்தார் ராதாரவி

நடிகர் ராதாரவி இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இதற்கு முன்னர் அவர் திமுகவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலையுதிர் காலம் திரைப்பட டிரைலர் வெளீயிட்டு விழாவில் கலந்துகொண்ட ராதாரவி நயன்தாரா மற்றும் நடிகைகளை அவதூறாக பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் திமுகவிலிருந்து விலகுவதாக ராதாரவி அறிவித்தார்.

இந்நிலையில் அவர் இன்று காலை முதல்வர் இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். இவர் அதிமுகவில் இணைந்த போது அமைச்சர் கடம்பூர் ராஜுவும் உடனிருந்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here