29 வருடங்களின் பின் மூளாய்- அச்சுவேலி போக்குவரத்து சேவை ஆரம்பிக்கிறது!

மூளாய், அச்சுவேலிக்கு இடையிலான 773 இலக்க வழித்தட தட்டிவான் சேவை, தனியார் சிற்றூர்தி சேவையாக எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை முதல் மீள செயற்படவுள்ளது.

1990 கள் வரை தட்டிவான் சேவையாக இந்த வழித்தட சேவை செயற்பட்டு வந்தது. பின்னர் யுத்த சூழ்நிலையால், இந்த வழித்தட சேவை தடைப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மூளாய் தட்டிவான் உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், இந்த வழித்தட போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இதன்படி, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவை கடந்த பெப்ரவரி மாதம் சந்தித்து, போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க கோரியதாக அவர்கள் அனுப்பி வைத்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமது வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக துறைசார் தரப்பினருடன் பேச்சுக்களை மேற்கொண்டு அச்சேவையை மேற்கொள்வதற்கான அனுமதியை பெற்றுத் தந்துள்ளதாகவும், எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை (16) இந்த சேவை ஆரம்பிப்பதற்கான விசேட நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும், இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துகொண்டு சேவையை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மார்க போக்குவரத்து சேவை சுமார் 29 வருடங்களின் பின்னர் மீண்டும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here