ஹப்புத்தளை தங்கமலை தோட்டத்தில் ஆலய அடிக்கல் நாட்டல்!

ஹப்புதலை தங்கமலை தோட்டம் இலக்கம் 06 மதுரைவீரன் ஆலயத்திற்கான அடிகல் நாட்டும் வைபவம் ஆலய குருக்களின் விசேட பூஜையுடன் இன்று இடம்பெற்றது.

பசறை தேர்தல் தொகுதியின் ஐ.தே.கட்சியின் அமைப்பாளரும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுபபினர் எ.அரவிந்தகுமார் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட தோட்ட பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here