சிறைச்சாலைகளிற்குள்ளிருந்து 200 தொலைபேசிகள் மீட்பு!

கடந்த ஆண்டு சிறைச்சாலைகளிற்குள் நடத்தப்பட்ட தேடுதலில் 200 தொலைபேசிகள் மீட்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, 213 தொலைபேசிகள், 268 சிம் கார்டுகள், 224 பக்கட் ஹெராயின், ஒரு பக்கெட் கேரளா கஞ்சா, எட்டு போதை மாத்திரைகள், 107 புகையிலை இலைகள், 78 சிகரெட்டுகள் மற்றும் 64,920 ரூபா பணம் ஆகியவை மீட்கப்பட்டன.

இந்த பொருட்களுடன் தொடர்புடைய மூன்று சிறைச்சாலை அதிகாரிகளும் கைதாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு நன்னடத்தை அடிப்படையில் 1473 கைதிகள் விடுதலையாகியுள்ளனர். அதில் வெசாக் தினத்தில் ஜனாதிபதியால் மன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 918 கைதிகளும் அடக்கம்.

சிறைச்சாலையில் புனர்வாழ்வு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த வருடம் 3.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here