தென்னிந்தியாவில் தொடரும் ஐ.எஸ் வேட்டை!

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தில் கோவையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை உக்கடத்தில் அசாருதீன், போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா ஆகியோரது வீடுகளில் காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் சோதனை நடக்கிறது. இதேபோன்று குனியமுத்தூரில் அபுபக்கர் சித்திக் உள்பட 8 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

தென்னிந்திய பகுதியில் ஐ.எஸ் வலையமைப்பு இரகசியமாக உருவாக்கப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. கோவையில் கைதான ஒருவரிடமிருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் தாக்குதல் பற்றிய எச்சரிக்கையை இந்தியா, இலங்கைக்கு வழங்கியுமிருந்தது.

ககோவை, கேரளாவின் சில இடங்களில் ஐ.எஸ் அமைப்பு இரகசியமாக இயங்குவதாக இந்தய புலனாய்வு வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன. அது தவிர, இலங்கை தாக்குதல் சூத்திரதாரிகள் சிலர் கடல்வழியாக தப்பி இந்தியாவிற்குள் நுழைந்திருக்கலாமென இந்தியா கருதுவதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here