டன்சினன் வட்டார பாடசாலைகளுக்கு தலா ஒரு இலட்சம் வழங்க திலகர் எம்.பி தீர்மானம்

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட டன்சினன் பகுதி பாடசாலைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க திலகர் எம்.பி நிதி ஒதுக்கியுள்ளதாக டன்சினன் வட்டார பிரதேச சபை உறுப்பினர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மிகவும் வசதிக்குறைந்த பாடசாலைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகளின் அடிப்டையிலேயே இவ்வாறான நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதன்மூலம் பாடசாலைகளின் உடைந்த நிலையில் காணப்படும் தளபாடங்கள் மற்றும் இதர சிறு சிறு வேலைகளுக்கு இவ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மைதானம் புனரமைப்பு, பாதுகாப்பு வேலி என்பன அமைப்பதற்கும் பாடசாலைகளுக்கு கனிசமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பாடசாலை அதிபர்கள் தன்னை தொடர்புக்கொண்டு அபிவிருத்தி நிதிகள் சம்பந்தமான விடயங்களை பெற்றுக்கொள்ளுபாறு டன்சினன் வட்டார கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

(நீலமேகம் பிரசாந்த்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here