இலங்கை- பங்களாதேஷ் போட்டி கைவிடப்பட்டது!

உலகக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளிற்கிடையிலான இன்றைய ஆட்டமும் மழையால் முழுமையாக பாதிக்கப்பட்டது.

பிரிஸ்டலில் இன்று கனமழை பெய்ததால், நாணயச்சுழற்சியும் இடம்பெறவில்லை. இலங்கை பங்குபெற்றிய கடைசி மூன்று போட்டிகளும் முழுமையாக பாதிக்கப்பட்டன. கடைசி இரண்டு போட்டிகளும் முழுமையாக கைவிடப்பட்டன.

இரண்டு அணிக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டது. இதன்படி இலங்கை 5வது இடத்தில் இன்றைய நாள் முடிவில் உள்ளது.

இதேவேளை, அதிக போட்டிகள் கைவிடப்பட்ட உலகக்கிண்ண தொடராக இந்த தொடரே அமைந்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here