அண்ணா வழியில் தம்பி… ஒரே இடத்தில் தவறான முடிவெடுத்த சகோதரர்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை கிழக்கில் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

ஆரோக்கியநாதர் கபிலன் (21) என்ற இளைஞனே உயிரை மாய்த்துள்ளார்.

வீட்டிற்கு அண்மையாக உள்ள சிறிய களப்பு பற்றைக்குள் உள்ள மரமொன்றில் இவரது சடலம் தொங்கியதை அவதானித்து, உறவினர்களிடம் தகவல் வழங்கப்பட்டது. விடிகாலையில் வீட்டிலிருந்து சென்று உயிரை மாய்த்துள்ளார்.

குடும்பப்பிரச்சனை காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதேவேளை, இரண்டு வருடங்களின் முன்னர் அவரது சகோதரன் ஒருவரும், உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். சகோதரன் உயிரை மாய்த்த மரத்திலேயே, இந்த இளைஞனும் துக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here