டிப்பர் வாகனங்களை நம்பியிருக்கும் வன்னி மாணவர்கள்!

முல்லைத்தீவு மற்றும் வவுனியாவின் எல்லையோர பகுதிகளில் உள்ள மாணவர்களின் போக்குவரத்து பிரச்சனை தீர்க்கப்படாமல் தொடர்கதையாகவே உள்ளது.

இலங்கையின் முக்கிய வீதிகளில் ஒன்றாக ஏ9 வீதியால் பாடசாலைக்கு செல்லும் இந்த மாணவர்கள், போக்குவரத்து வசதிகள் இல்லாமல் சிரமப்படுவதே துயரமானது.

வன்னிப்பகுதியிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் பனிக்கன்குளம் கிளவன்குளம், வவுனியா மாவட்டத்தின் கனகராயன்குளம், புளியங்குளம், யானைபூட்டிய குளம், போன்ற பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் பேருந்து வசதிகள் இல்லாமல், அந்த பகுதியால் பயணிக்கும் தனியார் வாகனங்களிடமே உதவிகோருகிறார்கள்.

பாடசாலைகளுக்குச் செல்வற்காக ஏ9 வீதியில் காத்திருக்கும் பாடசாலை மாணவர்களை, அந்த வீதியால் பயணிக்கும் அரச, தனியார் பேருந்துகள் ஏற்றுவதில்லை. அந்த பகுதியில் பாடசாலை மாணவர்களிற்கான பேருந்து சேவையும் இல்லை.

இதனால் ஏ9 வீதியில் பயணிக்கும் டிப்பர் வாகனங்களையே மாணவர்கள் போக்குவரத்திற்கு நம்பியுள்ளனர். பாடசாலை சீருடையுடன் மறிப்பவர்களை டிப்பர் சாரதிகள் ஏற்றிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.

இந்த பகுதி மாணவர்களின் போக்குவரத்து பிரச்சனை தீர்வது எப்போது?

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here