மலேசியாவில் கொல்லப்பட்ட வடகொரிய ஜனாதிபதியின் சகோதரன் சி.ஐ.ஏ உளவாளி!

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் ஒன்று விட்ட சகோதரன் கிம் ஜோங் நாம் கடந்த 2017இல் மலேசியாவில் நச்சுவாயு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

2017 பெப்ரவரியில் அவர் மலேசியா சென்றது, அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ தொடர்பாளர்களை சந்திக்கவே என Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், அவருக்கும் சி.ஐ.ஏக்குமிடையில் இருந்த உறவு எத்தகையது என்பதை தெளிவாக அறிய முடியவல்லையென்றும் குறிப்பிட்டுள்ளது.

வடகொரிய குடும்ப ஆட்சியை விமர்சித்த கிம் ஜோங் நாம் அங்கிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்தார். அவருக்கு வடகொரிய தளம் இல்லாதபோதும், அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்தார் என்ற அடிப்படையில் அவருடன் சி.ஐ.ஏ நெருக்கமாக இருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

இதையடுத்தே, அவரை படுகொலை செய்ய வடகொரிய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்காக இளம்பெண்கள் தெரிவு செய்யப்பட்டு, அவரது முகத்தை நச்சுவாயு கைக்குட்டையால் மூடி கொலை செய்தனர்.

தொலைக்காட்சி நிகழ்சியொன்று என கூறியே அந்த பெண்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தோனேசியா, வியாட்நாமை சேர்ந்த பெண்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியென நம்பி, இந்த கொலை முயற்சியை அறியாமல் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் தற்போது விடுதலையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here