மைத்திரி அதிரடி: அமைச்சரவையை ஒத்தி வைத்தார்?

வாராந்தம் கூடும் மைச்சரவை கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறாது என தெரிகிறது. நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ஐ.தே.க அரசியல் ஆயுதமாக பாவிக்கிறது என கருதும் ஜனாதிபதி, அதனை உடனடியாக கைவிட வலியுறுத்தினார். எனினும், ஐ.தே.க அரசு அதை கைவிடவில்லை. இதையடுத்தே இன்றைய அமைச்சரவை கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

சில தினங்களின் முன்னர் கூட்டப்பட்ட விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது, தெரிவுக்குழுவை இடைநிறுத்த வேண்டும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டதும், உடனடியாக தெரிவுக்குழுவை நிறுத்த வேண்டுமென ஜனாதிபதி கேட்டிருந்தார்.

எனினும், இன்று தெரிவுக்குழுவின் அமர்வு தொடரவுள்ளது. நேற்று அந்த முடிவு எட்டப்பட்டது. முன்னதாக, தெரிவுக்குழுவை கைவிடக்கூடாது என ஆசு மாரசிங்க, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் ரணிலை நேரடியாக வலியுறுத்தியிருந்தனர்.

இதன்மூலம், மீண்டும் நிறைவேற்றதிகாரத்திற்கும், சட்டவாக்க நாடாளுமன்றத்திற்குமிடையில் முறுகல் தோன்றியுள்ளது. கடந்த ஒக்ரோபர் குழப்பத்தின் பின் நாடு அரசியல், நிர்வாகரீதியில் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருந்தது. ஜனாதிபதி- ஐ.தே.க வின் அரசியல் ஏட்டிக்குப்போட்டியான தன்மையால் மீண்டும் இந்த விடயங்களில் வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை கூட்டங்கள் கூடாத பட்சத்தில், புதிய முடிவுகள் எதுவும் அங்கீகரிக்கப்பட மாட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here